திறந்திருக்கும் நேரம்

தினசரி
  • 8.30 - 13.00
  • 18.00 - 21.00
வெள்ளிக்கிழமை
  • 8.00 - 21.00
விஷேட தினங்களில் மாறுபடும்

நித்திய பூஜைகள்

தினசரி
  • காலை 8.30
  • மாலை 7.30
வெள்ளிக்கிழமை
  • 8.00 / 12.00 / 19.30
விஷேட தினங்களில் மாறுபடும்

விஷேட நேரடி ஒளிபரப்பு

பதிகங்கள்

Sep
16
2024
தைப்பொங்கல்

தை 1 அன்று தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆபிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சமயங்கள் கடந்து அனேக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது.

 

நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, சூரியன், உதவிய மாடு போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். இதுவே நாளடைவில் கொண்டாடும் பொங்கல் திருநாள் கொண்டாட்டமாக மாறியது.

உழவர் திருநாள்

பொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கை சக்திகளுக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.

மாத நிகழ்வுகள்

உங்கள் எண்ணங்கள் , கருத்துக்கள்

தொடர்புகளுக்கு

Sihlweg 3

Postfach

8134 ZH - Adliswil

+41 (0) 44 709 06 30

+41 (0) 79 866 85 00

[email protected]