திறந்திருக்கும் நேரம்

தினசரி
  • 8.30 - 13.00
  • 18.00 - 21.00
வெள்ளிக்கிழமை
  • 8.00 - 21.00
விஷேட தினங்களில் மாறுபடும்

நித்திய பூஜைகள்

தினசரி
  • காலை 8.30
  • மாலை 7.30
வெள்ளிக்கிழமை
  • 8.00 / 12.00 / 19.30
விஷேட தினங்களில் மாறுபடும்

விஷேட நேரடி ஒளிபரப்பு

பதிகங்கள்

Apr
24
2024
விநாயகர் சதுர்த்தி

இந்துக்களால் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானது விநாயகர் சதுர்த்தி விழா. முழு முதல் கடவுளும்  ஈசனின் மகனுமான விநாயகர் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி விழாவானது. ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. அரக்கர்களின் கொடுமையில் இருந்து தங்களை காத்திட, தவமிருந்து சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டதின்  பயனாக  தடைகளைத் தகர்த்தெறியும்  ஆற்றலுடன் சிவன் பார்வதியால்  உருவாக்கப்பட்டவர்தான்  விநாயகப் பெருமான். ஒரு  ஆவணி மாத சதுர்த்தி அன்று விநாயகரை யானை முகத்தோடும், மனித உடலோடும், சிவபெருமான் கஜமுகாசுரனை அழிக்க அனுப்பி வைத்தார்.

விநாயகர் பெருமான் தனது கொம்புகளில் ஒன்றை ஒடித்து கஜமுகாசுரனை அழிக்க ஏவினார்.
அசுரனோ, மூஞ்சுறாய் வந்து எதிர்த்து நின்றான். விநாயகப் பெருமான் அவனை சம்ஹாரம் செய்தார்.

பின்னர் அவர் மூஞ்சுறைத் தனது வாகனமாக்கிக் கொண்டு அருளினார். இதன்மூலம் அனைவரும் சுபிட்சம் பெற்றனர். அன்று முதல் ஆவணி மாத சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் விநாயகரை வழிபட்டால் தீராதவினைகள் தீரும். சகல பாக்கியங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்

மாத நிகழ்வுகள்

உங்கள் எண்ணங்கள் , கருத்துக்கள்

தொடர்புகளுக்கு

Sihlweg 3

Postfach

8134 ZH - Adliswil

+41 (0) 44 709 06 30

+41 (0) 79 866 85 00

[email protected]